News August 18, 2024
குறைந்த முதலீட்டில் அதிக RETURNS

அதிக வட்டியுடன் லாபம் தரக்கூடிய 6 முதலீட்டுத் திட்டங்களை தெரிந்து கொள்ளலாம். 1) பங்குகளில் நேரடி முதலீடு செய்வது அதிகபட்ச லாபத்தை தரக்கூடும் 2) மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்வது 3) மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) முதலீடு செய்வது 4) தங்கம், வெள்ளி பரிமாற்றம், வர்த்தக நிதியில் முதலீடு செய்வது 5) கடன் பத்திரங்கள் மீது முதலீடு 6) ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு
Similar News
News December 23, 2025
ஸ்குவாட்ஸ் செய்தால் இலவச பஸ் டிக்கெட்!

உலகில் பல்வேறு நாடுகள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்து வருகின்றன. அந்த வகையில் ருமேனியாவில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உள்ளூர் போக்குவரத்தின் பயன்பாடு ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் வகையில், ஸ்மார்ட்டான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 20 ஸ்குவாட்ஸ் செய்தால் இலவச பஸ் டிக்கெட் கிடைக்கும். மேலே உள்ள போட்டோஸை ஸ்வைப் செய்து பாருங்க. உங்க கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 23, 2025
முதலிரவில் பதற்றம்.. பயந்து ஓடிய மாப்பிள்ளை

முதலிரவு குறித்த பதற்றத்தால் மாப்பிள்ளை வீட்டை விட்டு ஓடிய சம்பவம் UP-ல் நடந்துள்ளது. முதலிரவு அறையில் பயன்படுத்த, low watt bulb வாங்க சென்ற மொஹ்சீன் என்பவர் 5 நாள்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட அவர் தனக்கு பதற்றம், மன அழுத்தம் ஏற்பட்டதால் செய்வதறியாமல் ஓடியதாக கூறினார். இதற்கு மனநல ஆலோசனை பெறுங்கள் என அறிவுறுத்தி மொஹ்சீனை, போலீஸ் வீட்டுக்கு அனுப்பியது.
News December 23, 2025
50 காசு செல்லும்.. இது தெரியுமா உங்களுக்கு?

ஏறக்குறைய இல்லாமல் போன 50 காசு இன்றும் சட்டப்படி செல்லும் என்று RBI தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, 50 காசு நாணயங்களை புழக்கத்திலிருந்து நீக்கவில்லை. எனவே, நீங்கள் ₹.50 காசு கொடுத்து பொருள்கள் வாங்க முடியும். வியாபாரிகள் செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பத்தில் ₹.50 காசை வாங்குவதில்லை. இதனால், பல இடங்களில் ₹.50-க்கு பதில் ₹1 கொடுத்து வாங்கும் நிலைதான் உள்ளது. உங்ககிட்ட 50 காசு இருக்கா?


