News October 27, 2025
குறைந்த விலையில் அதிக புரோட்டீன்

நம் உடலின் வளர்ச்சிக்கும், தசைகளின் வலிமைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், முக்கிய ஊட்டச்சத்தாக புரோட்டீன் உள்ளது. தினசரி உணவில் புரோட்டீன் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்கும். அதிக செலவு இல்லாமல், குறைந்த விலையில் புரோட்டீனை எளிதாக பெறலாம். எந்த உணவில், எவ்வளவு புரோட்டீன் உள்ளது, என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
Similar News
News October 27, 2025
பிஹாரையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் அரசியல் (1/2)

67-ல் காங்., வீழ்ந்த மாநிலங்களில் பிஹாரும் TN-ம் முதன்மையானவை. பிஹாரில் லோஹியா சீடர்கள் (லாலு, நிதிஷ்) களத்தை பிடித்தனர். TN-ல் அண்ணாவின் தம்பிகள் (கருணாநிதி, எம்ஜிஆர்) ஆட்சியை தமதாக்கினர். ஜெ., மறைவுக்கு பிறகு அதிமுக vote bank சரிந்தது போல, பிஹாரில் நிதிஷின் JD(U), பாஜகவிடம் களத்தை இழந்துவருகிறது. பிஹாரில் இருதுருவ அரசியல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், TN-ம் தற்போது அதை நோக்கி நகர்ந்து வருகிறது.
News October 27, 2025
பிஹாரையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் அரசியல் (2/2)

சோசலிச கட்சியான JD(U) உடன் பயணித்தபடியே, பாஜக Hindutva-வை மாற்றாக முன்வைக்கிறது. TN-ல் திராவிட கட்சியான அதிமுகவுடன் கைகோர்த்தபடி, களத்தை திராவிடம் Vs இந்துத்துவம் என மாற்ற முனைகிறது. மாநிலத்தில் INDIA கூட்டணியை வழிநடத்தும் DMK, RJD அடுத்த தலைமுறையை (உதய், தேஜஸ்வி) கைகாட்டிவிட்டன; பாஜக எதிர்ப்பில் உறுதிகாட்டினாலும், எதிர்க்கட்சியாக மாநில கட்சிகளே (ADMK, JD(U)) தொடர வேண்டுமென விரும்புகின்றன.
News October 27, 2025
கர்ப்பிணிகளே, இதனால் உங்க குழந்தைக்கு ஆபத்து!

உண்ணும் உணவு, தண்ணீர் வழியாக தினம் தினம் மனிதனின் உடலில் லட்சக்கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கிறது. இதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகிறது. எனவே, முடிந்த வரை அனைவரும் (குறிப்பாக கர்ப்பிணிகள்) பிளாஸ்டிக் பொருள்களை தவிருங்கள். இல்லையென்றால் அவை உங்கள் ரத்தத்தில் கலந்து தாய்ப்பால் வழியாக உங்கள் குழந்தையின் உடலுக்குள் செல்லும். அடுத்த தலைமுறையை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.


