News February 17, 2025
தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. புகார் தொடர்பான காவல்துறையின் துரித நடவடிக்கை மற்றும் டிஐஜி அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்தது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு நீதிமன்றம் பாராட்டியுள்ளது. மாணவி விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் எனவும் நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.
Similar News
News November 19, 2025
இ பாஸ்போர்ட் வாங்க ரெடியா?

புதிய அம்சங்களுடன் சிப் பதிக்கப்பட்ட மின்னணு பாஸ்போர்ட் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதில் ஆர்எப்ஐடி எனப்படும் ரேடியோ அலை அடையாள சிப் மற்றும் ஆன்டனா பொருத்தப்பட்டிருக்கும். இது உங்கள் பயோமெட்ரிக் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். 2035-க்குள் நாட்டிலுள்ள அனைத்து பாஸ்போர்ட்டுகளையும் மின்னணு முறைக்கு மாற்ற அரசு இலக்கு வைத்துள்ளது.
News November 19, 2025
வரலாற்றில் இன்று

1917 – முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள்
1946 – ஆப்கானித்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன
1961 – நடிகர் விவேக் பிறந்தநாள்
1976 – நடிகர் அருண் விஜய் பிறந்த தினம்
1999 – சீனா தனது முதலாவது சென்சூ 1 விண்கலத்தை ஏவியது
2008 – நடிகர் எம். என். நம்பியார் மறைந்தநாள்
News November 19, 2025
SIR பணியால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்களா BLO?

TN உட்பட பல்வேறு மாநிலங்களில், SIR பணிகளில் பூத் லெவல் ஆபிசர் எனும் BLO-கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் இந்த பணியில் ஈடுபட்டுள்ள BLO-களும் வேலை அழுத்தம் பல மடங்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கேரளா, ராஜஸ்தானை சேர்ந்த 2 அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறுகிய நேரத்தில் SIR பணிகளை முடிக்க ECI திட்டமிட்டுள்ளதே இதற்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


