News March 5, 2025
கோயில் விழாக்களில் சினிமா பாடல்களுக்கு தடை: ஐகோர்ட்

கோயில் திருவிழாக்களின்போது சினிமா பாடல்களை பாடுவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி கோயிலுக்குள் பக்தி பாடல்களை மட்டுமே பாட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். ஆபாச நடனங்கள், அதைத் தொடர்ந்து சினிமா பாடல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பக்தர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
Similar News
News January 3, 2026
SA அணிக்கு 301 ரன்கள் டார்கெட் நிர்ணயித்த இந்தியா

தென்னாப்பிரிக்கா U19 அணிக்கு எதிரான முதல் ODI போட்டியில், இந்திய அணி 300 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து சொதப்பினாலும், அடுத்து வந்த ஹர்வன்ஷ் பங்காலியா 93 ரன்களையும், RS அம்ப்ரிஷ் 65 ரன்களையும் விளாசியதால் டீசண்டான ஸ்கோர் கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்க பவுலர் JJ பேசன் அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
News January 3, 2026
‘மகளிர் உரிமைத் தொகை ₹3,000’

தற்போது மகளிர் உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனை ₹1,500 ஆக உயர்த்தப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகையை ₹3,000 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பரிசீலித்து ஆலோசிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
News January 3, 2026
வீட்டில் வளர்க்கக் கூடிய மூலிகை செடிகள்

உங்கள் வீட்டின் பால்கனியை எளிதாக தோட்டமாக மாற்றலாம். பெரும்பாலானோர் அழகு செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் செலுத்துவார்கள். தினசரி பயன்பாடு மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட செடிகளையும் எளிதாக வளர்க்கலாம். அந்த செடிகள் சிலவற்றை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். நீங்க என்ன செடி வளர்க்க போறீங்க. கமெண்ட்ல சொல்லுங்க. SHARE IT.


