News August 25, 2024
இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லா

இஸ்ரேலில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் வகையில், 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பதிலடி கொடுக்கும் வகையில் வட இஸ்ரேலில் உள்ள ராணுவத் தளங்களை குறி வைத்து, ட்ரோன் தாக்குதலை அந்த அமைப்பை நடத்தியுள்ளது. இதன் காரணமாக, இஸ்ரேலில் 48 மணி நேரத்திற்கு அவசர நிலையை அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
Similar News
News December 1, 2025
சச்சின் டெண்டுல்கர் பொன்மொழிகள்!

*உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். ஆனால், குறுக்கு வழியில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். *விமர்சனங்களை உங்களின் வெற்றிப் படிகட்டுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். *துரோகத்தை அன்பினால் வெல்லுங்கள். *அனைத்து துறைகளிலும் உயர்வு தாழ்வு இருக்கும். முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். *எதிரி யாராக இருந்தால் என்ன? முதலில் மோதிப்பார். *நான் என்னை எப்பொழுதும் மற்றொருவருடன் ஒப்பிட்டதில்லை.
News December 1, 2025
மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை: ஜாய் கிரிசில்டா

DNA பரிசோதனைக்கு பயந்து, கடந்த ஒரு மாதமாக மாதம்பட்டி ரங்கராஜ் தலைமறைவாக உள்ளார் என ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். எல்லாவற்றையும் சட்டரீதியாக சந்திப்பேன் எனக் கூறிய மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதால் ஒளிந்து ஓடுகிறார் என்றும், அவர் கூறியுள்ளார். இப்பிரச்னையில் செய்த செயலுக்கான பலனை மாதம்பட்டி நிச்சயம் அனுபவிப்பார் எனவும், அவர் X-ல் பதிவிட்டுள்ளார்.
News December 1, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 536 ▶குறள்: இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல். ▶பொருள்: எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.


