News November 25, 2024
RCB, RR வாங்கிய வீரர்கள் லிஸ்ட் இதோ..!

இன்றைய முதல் நாள் ஏலத்தில் RCB 6 வீரர்களையும், RR 4 வீரர்களையும் வாங்கியுள்ளது. ஹேஸில்வுட், சால்ட், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, ரஷிக் தர் ஆகியோரை RCB கைப்பற்றியுள்ளது. அதேபோல் RR அணி ஜோஃப்ரா ஆர்ச்சர், வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா ஆகாஷ் மத்வால் ஆகியோரை வாங்கியுள்ளது. RCB அணி அதிகபட்சமாக ஹேஸில்வுட்டை ₹12.50 கோடிக்கும், RR அணி ஆர்ச்சரை ₹12.50 கோடி விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது.
Similar News
News January 20, 2026
நடிகர் தனுஷுடன் காதல்.. சர்ச்சையில் சிக்கிய நடிகைகள்

நடிகர் தனுஷும், நடிகை மிருணாள் தாகூரும் காதலித்து வருவதாகவும், பிப்.14-ல் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு இருதரப்பினரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தனுஷுடன் காதலில் இருப்பதாக ஏற்கெனவே சில நடிகைகள் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர். ஆனால், அவையெல்லாம் வதந்திகளாகவே முடிவடைந்துள்ளன. அந்த நடிகைகளின் போட்டோக்கள் மேலே கொடுத்துள்ளோம்.
News January 20, 2026
₹100 கோடியில் ஹாட்ரிக் ஹிட் அடித்த SK..!

பொங்கல் விருந்தாக வெளியான சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் உலகம் முழுவதும் ₹100 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.10-ல் உலகமெங்கும் ரிலீசான ‘பராசக்தி’, முதல் 2 நாள்களில் ₹52 கோடியும், அடுத்த 9 நாள்களில் ₹48 கோடியும் வசூலித்துள்ளது. அமரன், மதராஸியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு இது ஹாட்ரிக் ₹100 கோடி படமாகும். நீங்க பராசக்தி பார்த்துட்டீங்களா? SK, ஸ்ரீலீலா நடிப்பு எப்படி?
News January 20, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. மகிழ்ச்சியான செய்தி

ஜன நாயகன் பட சென்சார் சான்று தொடர்பான வழக்கை <<18907367>>சென்னை ஐகோர்ட்<<>> தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ள நிலையில், படம் விரைவில் வெளியாகும் என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. நாளை (அ) நாளை மறுநாள் தீர்ப்பு வெளியாகும் என விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சென்சார் போர்டில் இருக்கும் ஒருவர் அளித்த புகாரின்பேரில் படத்தின் ரிலீஸை நிறுத்துவது சட்ட ரீதியாக தவறு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


