News April 16, 2024
வெப்ப நோய்களை விரட்டும் மூலிகைக் குடிநீர்

வெயில் காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள தாகச்சமணி மூலிகைக் குடிநீரை பருகலாமென சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. பதிமுகம், கருங்காலி, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, நன்னாரி, ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம், அதிமதுரம் போன்றவற்றின் தொகுப்பான தாகச்சமணி மூலிகைப் பொடியை (ஒரு தேக்கரண்டி) ஐந்து லிட்டர் நீரில் போட்டு லேசாகக் கொதிக்க வைத்து, குடிநீராக பயன்படுத்தலாம்.
Similar News
News November 23, 2025
கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்

கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு அஜ்ஜுர் கிராமத்தைச் சேர்ந்த ஶ்ரீ ரங்கன்(65) என்பவர் இன்று காலை 3 மணிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக தனது வீட்டிற்கு வெளியே வந்த போது அங்கிருந்த புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டெருமை அவரை முட்டி தாக்கியது. இதனால் காயமடைந்த அவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News November 23, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

புயல் அலர்ட்டால், தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், முதல்கட்டமாக தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை(நவ.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன. தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. SHARE IT.
News November 23, 2025
தலைக்கு குளிச்சதும் டவல் கட்டுறீங்களா? NOTE THIS!

தலைக்கு குளித்த பின் டவலால் முடியை கட்டுவது பெண்கள் வழக்கமாக செய்யும் ஒன்றுதான். ஆனால் டவலை இறுக்கமாக கட்டினால் முடி உடைவது, உதிர்வது போன்ற பிரச்னைகள் வரலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே, ஈரத்தலையை டவலை வைத்து மென்மையாக துடையுங்கள். வேண்டுமென்றால் Cool Mode-ல் டிரையரை யூஸ் பண்ணலாம். உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


