News October 5, 2025

மூலிகை: சூப்பர் மருத்துவ குணங்களை கொண்ட சுக்கு!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, *சுக்குடன், தனியா சேர்த்து அரைத்து உண்டால், அதிக மதுவால் ஏற்பட்ட போதை குறையும்*சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி போய்விடும் *சுக்குடன், ஒரு வெற்றிலையை சேர்த்து மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும் *சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை ஆகியவற்றில் கஷாயம் செய்து பருகினால், சளி குறையும். SHARE.

Similar News

News October 5, 2025

கருர் நெரிசல் திட்டமிட்ட சம்பவம்: குஷ்பு

image

கரூர் சம்பவம் தொடர்பாக CBI விசாரணையில் இருந்து CM பின்வாங்கியது ஏன் என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், அரசின் அலட்சியமே நெரிசலுக்கு காரணம் எனவும் கூறியுள்ளார். விஜய்க்கு அதிக கூட்டம் கூடும் என தெரிந்தும் அரசு சரியான இடத்தை அவருக்கு ஒதுக்கவில்லை என்றும், இந்த விவாகரத்தில் CM மவுனமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News October 5, 2025

மழைக்காலத்தில் இந்த விஷயங்களை மறக்காதீர்!

image

மழை வெளுத்து வாங்கும் நிலையில், டாக்டர்களின் அறிவுரையை கேளுங்க: ​​இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு, சிக்குன்குனியா & டைபாய்டு போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகம். அதனால் கொசுக்கள் & ஈக்களிலிருந்து பாதுகாத்து கொள்ள கொசு வலைகளைப் பயன்படுத்துங்க * கூட்டமான இடங்களில் மாஸ்க் அணியுங்க *சாப்பிடுவதற்கு முன், சோப்பு போட்டு கையை கழுவுங்க *வடிகட்டிய வெந்நீரை குடியுங்க. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 5, 2025

கேப்டன்களின் கேப்டனான ரோஹித் சர்மா!

image

ODI கிரிக்கெட்டின் மிக சிறந்த கேப்டன்களில் ஒருவராக தனது Legacy-யை ரோஹித் சர்மா நிலைநிறுத்தியுள்ளார் *சர்வதேச அளவில் அதிக வெற்றி (குறைந்தது 100 மேட்ச்) கொண்ட கேப்டன் பட்டியலில் முதல் இடம் (72.5 %) *ICC தொடர்களில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்களில் முதல் இடத்தில்(87.1%) ரோஹித் உள்ளார். ஜாம்பவான்களான பாண்டிங், தோனி ஆகியோரையும் ரோஹித் முந்தியுள்ளார். உங்களுக்கு பிடித்த கேப்டன் ரோஹித் மொமெண்ட் எது?

error: Content is protected !!