News September 10, 2025

மூலிகை: பசலைக்கீரையும் பலவித நன்மைகளும்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
*பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் உடலை பாதுகாக்கும்.
*ஃபோலேட் இருப்பதால், பசலைக்கீரையை தவறாமல் சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
*லுடின் நிறைந்திருப்பதால், கண் புரை & இதர கண் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.
*பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால் மூட்டுகளில் வலி குறையும். Share it to friends.

Similar News

News September 10, 2025

அதிமுகவில் அடுத்த பரபரப்பு.. EPS-க்கு பதில் இவரா?

image

EPS-க்கு எதிராக செங்கோட்டையன் கலகக் குரல் எழுப்பியதற்கு பின்னால், எஸ்.பி.வேலுமணி இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இதற்கு முக்கிய காரணம் கொங்குவில் EPS-க்கு இணையாக செல்வாக்கு படைத்தவர் வேலுமணி. இதனால், இனி ‘நானே முதல்வர்’ என்று அவர் காய்களை நகர்த்த ஆரம்பித்து இருக்கிறாராம். குறிப்பாக, பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கும் இவரின் பங்கு முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.

News September 10, 2025

அரசு ஆவணங்கள் தொலைஞ்சு போச்சா.. இனி No டென்ஷன்!

image

10, +2 மார்க்‌ஷீட், அரசு ஆவணங்கள் ஏதேனும் தொலைந்துவிட்டால், வாங்க அரசு அலுவலகங்களை ஏறி இறங்க வேண்டிய தேவையில்லை. ஈசியாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அரசின் epettagam.tn.gov.in என்ற பக்கத்திற்கு செல்லுங்கள். இதில், உங்களின் ஆதார் எண்ணை கொடுத்து OTP-யை மட்டும் Verify செய்தால் போதும். அரசு சார்ந்த ஆவணங்கள் அனைத்தும் உடனே வந்துவிடும். SHARE IT.

News September 10, 2025

விஜய்க்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன?

image

*திருச்சியில் பிரசாரம் செய்யும் விஜய் ரோடு ஷோ செல்லக் கூடாது; வாகனத்தில் அமர்ந்தபடியே வர வேண்டும் *விஜய்யின் பின்னால் 5-6 வாகனங்கள் மட்டுமே பின் தொடர வேண்டும் *திருச்சியில் பிரசாரத்தை முடித்துவிட்டு, திருவெறும்பூர் நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும் *பரப்புரையில் 25 நிமிடங்கள் உரையாற்ற வேண்டும் *சட்டம் ஒழுங்கு பிரச்னை வரக் கூடாது * பொதுமக்கள், வியாபாரிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது.

error: Content is protected !!