News October 4, 2025
மூலிகை: துத்திக்கீரை மருத்துவ பயன்கள்!

துத்திக் கீரையை நறுக்கி கொதிக்க வைத்து, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து ரசமாக அருந்தினால், உடல் சூடு தணியும் *துத்தி இலையுடன் ஆமணக்கு எண்ணெய்யை வதக்கி, வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டினால், கட்டிகள் உடையும் *துத்தி இலையை கொதிக்க வைத்து, அந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் ஈறு பிரச்னைகள் தீரும் *துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும். SHARE.
Similar News
News October 4, 2025
₹20 லட்சம் வேணுமா? இதோ இருக்கு அசத்தல் திட்டம்

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் ₹20 லட்சம் தொகையை பெறலாம். உங்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை என்றால், தினமும் ₹50 செலுத்துங்கள். 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை பெறலாம். இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.
News October 4, 2025
மாறிமாறி குற்றஞ்சாட்டுவதை விட்டுவிடுங்க: மு.க.ஸ்டாலின்

கரூர் துயரத்தில் திமுக கூட்டணி கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் மாறிமாறி குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து CM ஸ்டாலின், துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என அறிவுறுத்தியுள்ளார். இனி இப்படி ஒரு பெருந்துயரம் நடக்கக்கூடாது. இதற்காக அனைவரது ஆலோசனைகளையும் வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.
News October 4, 2025
BREAKING: இந்திய அணி அபார வெற்றி!

WI-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் & 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் WI 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா 448/5 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய WI, இந்திய பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 146 ரன்களில் சுருண்டது. ஜடேஜா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.