News October 17, 2025
மூலிகை: நீர்முள்ளியின் மருத்துவ பயன்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ★நீர்முள்ளி விதைகள் முடக்குவாத பிரச்னைகளை சரி செய்ய உதவுகின்றன ★நீர்முள்ளியின் இலைகளை வேகவைத்து அந்த தண்ணீரை குடித்தால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் ★நீர்முள்ளியின் இலைகள் வயிற்று வலி & மலச்சிக்கலை சரி செய்கின்றன ★நீர்முள்ளி வேரை பொடியாக்கி நீரில் கரைத்து குடித்தால், மாதவிடாய் பிரச்னை சரியாகும். இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.
Similar News
News October 18, 2025
BREAKING: கடும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 7 காசுகள் சரிந்து ₹88.03 ஆக உள்ளது. இதனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், ரூபாய் சரிவின் காரணமாக இழப்பை சந்திக்க நேரிடும். மேலும் அவர்களின் வெளிநாட்டு பயணங்கள், கல்விச் செலவுகள் அதிகரிக்கும். அத்துடன் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்களிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
News October 18, 2025
தீபம் காட்டும் போது கற்பூரம் அணைந்தால் அபசகுணமா?

கற்பூர ஆரத்தி செய்த பிறகுதான், பூஜை பூர்த்தியானதாக கருதப்படுகிறது. கற்பூரம் எரியும்போது காற்றில் மறைந்துவிடுவதை போல, நமது ஆன்மாவும் இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து ஒன்றுபட வேண்டும் என்ற தத்துவத்தை கற்பூரம் விளக்குகிறது. தீபாராதனையின் போது தீபம் அணைந்துவிட்டால் அபசகுணம் என்று எண்ண வேண்டாம். அதே கற்பூரத்தை மீண்டும் ஏற்றாமல், உடனே வேறு கற்பூர துண்டுகளை வைத்து எரித்து தீபாராதனை காட்டுங்கள்.
News October 18, 2025
விஜய் போட்டியிடும் தொகுதி.. தகவல் வெளியானது

‘V’ என்ற எழுத்தில் துவங்கும் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என விஜய்யின் குடும்ப ஜோதிடர் கணித்துள்ளாராம். இதனால், அந்த எழுத்தில் தொடங்கும் 9 தொகுதிகளில் ரகசிய சர்வே எடுக்கப்பட்டு வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘V’ என்ற எழுத்தில் வில்லிவாக்கம், விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, விருத்தாசலம், வீரபாண்டி, விராலிமலை, விருதுநகர், விளாத்திகுளம், விளவங்கோடு தொகுதிகள் உள்ளன.