News August 18, 2024

மூலிகை: தோல் நோய்களைப் போக்கும் நல்வேளை

image

நாட்பட்ட தோல் நோய்களை சரிசெய்யும் ஆற்றல் மாலை மங்கும் வேளையில் பூக்கும் நல்வேளை செடிக்கு இருப்பதாக சித்த நூல் கூறுகிறது. கெப்பாரிடேசியே, பீட்டா-கரோடீன், க்ளியோகைனால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள அதன் இளம் இலைகளை தேங்காய் எண்ணெய்யில் வெள்ளைப் பூண்டோடு சேர்த்துக் காய்ச்சி, உடலுக்கு தேய்த்துக் குளித்தால் உடலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமை, பாக்டீரியா & பூஞ்சைத் தொற்றுக்கள் நீங்குமாம்.

Similar News

News December 4, 2025

‘டியூட்’ சர்ச்சை.. இழப்பீடு பெற்ற இளையராஜா

image

‘டியூட்’ படத்தில் கருத்த மச்சான், நூறு வருஷம் உள்ளிட்ட பாடல்களை, தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாக மெட்ராஸ் HC-ல் இளையராஜா வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கியதாகவும், படத்தின் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் பதிலளித்துள்ளது. இருதரப்பும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், டியூட்-ல் மீண்டும் அப்பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

News December 4, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 539
▶குறள்:
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
▶பொருள்: மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

News December 4, 2025

தோல்விக்கான காரணங்களை அடுக்கிய கே.எல்.ராகுல்

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் தோற்றதற்கு டாஸும் ஒரு முக்கிய காரணம் என்று கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார். ஏனெனில், 2-வது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீசுவது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், பேட்டிங்கின் போது 20-25 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கலாம் எனவும் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

error: Content is protected !!