News September 27, 2025
மூலிகை: கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் தெரியுமா!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி ➢கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து காலை, மாலை 5 நாள்கள் சாப்பிட்டு வந்தால், பிரசவத்துக்கு பின் கருப்பையில் உள்ள அழுக்கு நீங்கும் ➢கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை பொடி செய்து, இரவில் நீரில் கலந்து குடித்தால், தேவையற்ற கொழுப்பு நீங்கும் ➢சளியால் ஏற்படும் காய்ச்சல், மூக்கடைப்பு ஆகியவற்றுக்கும் கருஞ்சீரகம் சிறந்த நிவாரணியாகும். SHARE.
Similar News
News January 2, 2026
பொங்கல் பரிசு பணம்.. முக்கிய தகவல் கசிந்தது

பொங்கல் <<18728682>>பரிசுத் தொகுப்புக்காக ₹248 கோடி<<>> ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ரொக்கம் குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் கசிந்துள்ளது. 2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹3,000 வழங்க அரசுக்கு சுமார் ₹6,500 கோடி தேவை. ஏற்கெனவே மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகைக்கு ₹1,300 கோடி செலவாகிறது. இதனால், மேலும் நிதிச்சுமை ஏற்படும் என்பதால் அரசு நீண்ட யோசனையில் உள்ளதாம். உங்கள் கருத்து?
News January 2, 2026
கூட்டணி முடிவு.. தவெக தீவிர ஆலோசனை

2026 தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தவெக மாநில நிர்வாகிகள் கூட்டம் பனையூர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கி வரும் இக்கூட்டத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை, விஜய்யின் அடுத்தகட்ட மக்கள் சந்திப்பு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 2, 2026
1 கிலோ மாட்டு சாணம் ₹11,000!

NZ-ன் ஆக்லாந்தில் Navafresh என்ற இந்திய கடையில் விற்கப்படும் மாட்டு கோமியம் & சாணத்தின் விலை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2 லிட்டர் கோமியம் $NZ253-க்கும்(₹13,000), 1 கிலோ சாணம் $NZ220-க்கும் (₹11,000)விற்கப்படுகிறதாம். இதில் மேலும் வியப்பூட்டும் தகவல் என்னவென்றால், சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பேபி பவுடர் $NZ214 (கிட்டத்தட்ட ₹13,100) வரைக்கும் விற்கப்படுகிறது. என்னவென்று சொல்ல!


