News August 9, 2024
மூலிகை: நுரையீரல் தொற்றை விரட்டும் கற்பூர வள்ளி

பருவமழைக் காலத்தில் குளிர் காரணமாக ஏற்படும் நுரையீரல் தொற்று & கோழையை சரிசெய்யும் ஆற்றல் கற்பூர வள்ளிக்கு இருப்பதாக அகத்தியரின் பாடல் கூறுகிறது. பி-சைமீன், தைமால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள கற்பூர வள்ளி இலைகளை, ஏலம், கிராம்பு ஆகியவற்றுடன் சேர்த்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேன் கலந்துப் பருகினால் மாந்தம், இருமல், சளி, மலச் சிக்கல், தொண்டை கபம் போன்ற பிரச்னைகள் நீங்குமாம்.
Similar News
News November 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 512 ▶குறள்: வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. ▶பொருள்: பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.
News November 7, 2025
அகமதாபாத்தில்.. 2026 டி20 WC இறுதிப்போட்டி

2026 டி-20 உலகக் கோப்பையை இந்தியாவில் நடைபெறும் நிலையில், இறுதிப்போட்டியை அகமதாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் டி20 உலகக் கோப்பை அட்டவணையை ஐசிசி வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் போட்டிகளை அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மைதானத்திலும் குறைந்தது 6 போட்டிகள் நடத்த வாய்ப்புள்ளது.
News November 7, 2025
CM ஸ்டாலின் அரசியல் பக்கமே வரக்கூடாது: குஷ்பு

திமுக ஆட்சியில் பெண்களுக்கு ஒரு நல்லது கூட நடக்கவில்லை என குஷ்பு விமர்சித்துள்ளார். CM ஸ்டாலினின் அரசு பெண்களுக்கு எப்போது பாதுகாப்பு அளிக்கும் என கேள்வி எழுப்பியுள்ள அவர், திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக சாடியுள்ளார். இவற்றுக்காக CM ஸ்டாலின் மனசாட்சிப்படி பதவி விலகுவதோடு மட்டுமின்றி, அரசியல் பக்கமே வராமல் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்


