News August 30, 2025
மூலிகை: மூட்டுவலியை நீக்கும் சித்தரத்தை!

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி,
➤சித்தரத்தையை தேனுடன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் குறையும்.
➤மூச்சுத்திணறலுக்கு அதிமதுரம், திப்பிலியை சித்தரத்தையை சேர்த்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம்.
➤உலர்ந்த சித்தரத்தை & அமுக்கரா கிழங்கை தூளாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் மூட்டுவலி நீங்கும்.
➤சித்தரத்தையை உலர்த்தி, நீரில் கொதிக்கவைத்து பருகினால், வறட்டு இருமல் தணியும். SHARE IT.
Similar News
News August 30, 2025
திமுகவில் பனிப்போர்.. அமைச்சர்களுக்குள் சண்டை?

சென்னை மாநகராட்சியில் அதிகாரிகளை நிர்வகிக்கும் விஷயத்தில், அமைச்சர்கள் நேருவுக்கும், சேகர்பாபுவுக்கு மோதல் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை சரியாக கையாளவில்லை என அதிகாரிகளிடம் நேரு கரார் காட்டியிருக்கிறார். அதற்கு, சேகர்பாபுவை கலந்தாலோசித்த பின்னரே, ஏதும் செய்ய முடியும் என்று பதில் வந்ததால் அமைச்சர்களுக்கு இடையே பனிப்போர் பெரிதாகி வருவதாக பேசப்படுகிறது.
News August 30, 2025
நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் கைது?

நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், திருமணம் செய்வதாக தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீஸில் புகாரளித்துள்ளார். மேலும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இன்னொருவரை கர்ப்பமாக்கியது சட்டப்படி குற்றம் என்பதால், ரங்கராஜ் கைதாக வாய்ப்புள்ளது என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
News August 30, 2025
TN-க்கு கல்வி நிதி கேட்டு 2-வது நாளாக MP உண்ணாவிரதம்

அரசியலமைப்புக்கு விரோதமாக TN-க்கு கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக MP சசிகாந்த் செந்தில் சாடியுள்ளார். SSA கல்வி திட்டத்தின் கீழ் 2023 – 24, 2024 – 25-ம் கல்வியாண்டில் நிலுவையில் உள்ள ₹2,401 கோடியை விடுவிக்க வலியுறுத்தி திருவள்ளூரில், அவர் நேற்று உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பிரகாஷ்ராஜ், கோபி நயினார் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.