News October 21, 2025
பிஹார் தேர்தலில் இருந்து பின்வாங்கிய ஹேமந்த் சோரன்

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், RJD-யுடன் இணைந்து ஜார்கண்ட் CM ஹேமந்த் சோரனின் முக்தி மோச்சா கட்சி இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு சரியாக அமையாததால், தனித்து 6 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக ஹேமந்த் சோரன் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிஹார் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சி சார்ப்பில் திடீரென அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News October 21, 2025
நிதிஷ் ரெட்டி 3 பார்மட் வீரர்: ரோஹித் சர்மா

இளம் ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி எல்லா பார்மட்களிலும் சிறந்த வீரராக வருவார் என ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI-ல் நிதிஷ் அறிமுகமான போது, அவருக்கு ரோஹித்தான் தொப்பியை கொடுத்து கவுரவித்தார். பின்னர், இந்திய அணியில் நீண்ட தூரம் பயணிக்கும் திறமை நிதிஷுக்கு உள்ளதாகவும், இந்திய அணி அவருக்கு எப்போது துணையாக இருக்கும் எனவும் கூறினார்.
News October 21, 2025
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட் சாய்ஸ்?

▶மரச்செக்கு தேங்காய் எண்ணெய்யில் சமைக்கப்படும் உணவு விரைவாக கெட்டுப்போகாது. இதில் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. ▶வேர்க்கடலை எண்ணெய் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலுக்கு நன்மை செய்யும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. ▶அவகேடோ எண்ணெய்யில் வறுத்த உணவுகள் சுவையாக இருக்கும். ▶பாமாயிலில் வைட்டமின் ஏ, நல்ல கொழுப்புகள் இருந்தாலும் இதை அதிகமாக பயன்படுத்தினால் கெட்ட கொழுப்பு அதிகமாகிவிடும்.
News October 21, 2025
வரலாற்றில் இன்று

*1895 – ஜப்பானிய படைகளின் முற்றுகையால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.
*1937 – நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்ததினம்.
*1943 – சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்திய அரசை அறிவித்தார்.
*1945 – பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
*1987 -யாழ்ப்பாண ஹாஸ்பிடல் படுகொலையில் 70 பேர் கொல்லப்பட்டனர்.