News November 23, 2024
மீண்டும் முதல்வராகும் ஹேமந்த் சோரன்!

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி முகத்தில் உள்ளது. இதில், ஆளும் ஜேஎம்எம் 29 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால், ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகவிருப்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது. பண மோசடி புகாரில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் ஹேமந்த் சோரன் 5 மாதங்கள் சிறை செல்ல நேரிட்டது. ஜாமினில் வெளியே வந்து மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 16, 2025
Google தேடலில் ஆபாச தளங்கள் வராமல் Lock செய்வது எப்படி?

குழந்தைகள் போனை தனியாக நோண்டி கொண்டிருக்கும் போதும், ஆபாச தளங்கள் கூகுளில் வராமல் இருக்க, இந்த <
News October 16, 2025
மக்களுக்காக மனமுருகி பிரார்த்தனை செய்த PM மோடி

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க PM மோடி ஆந்திராவிற்கு சென்றுள்ளார். இதனிடையே ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் மோடி வழிபாடு செய்தார். வேஷ்டியுடன் கோயிலுக்கு வந்த அவர் மனமுருகி சாமி தரிசனம் செய்தார். இந்திய மக்களின் ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்ததாக மோடி தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரின் சாமி தரிசன போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள்.
News October 16, 2025
உங்க கடனுக்கும் நாங்க வட்டி கட்டுறோம்: தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டுக்கான நிலுவை தொகையை மத்திய அரசு வழங்கினால் தான், கடன் சுமையில் சுமார் ₹3 லட்சம் கோடி குறையும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பேரவையில் EPS, தங்கமணி கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அதிமுக ஆட்சியில் 128% கடன் அளவு கூடியிருந்ததாக குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் விட்டு சென்ற கடனுக்கு, ₹1.40 லட்சம் கோடி வட்டியாக இந்த ஆட்சியில் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.