News April 24, 2024
பணக்கார வேட்பாளர் பட்டியலில் ஹேமமாலினி

கர்நாடகாவின் மாண்டியா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடாவின் சொத்து மதிப்பு ரூ.622 கோடியாக உள்ளது. 2ஆம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இவரே அதிகச் சொத்து மதிப்பு வைத்துள்ளார். 2ஆம் இடத்தில் 593 கோடி சொத்துடன் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேசும், 3ஆம் இடத்தில் 278 கோடி சொத்துக்களுடன் உ.பி மதுரா தொகுதி பாஜக வேட்பாளர் ஹேமமாலினியும் உள்ளனர்.
Similar News
News January 3, 2026
காலையில் குறைந்து மாலையில் அதிகரித்த தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில நாள்களாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ₹480 குறைந்திருந்த நிலையில், மாலையில் ₹640 அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹12,600-க்கும், 1 சவரன் தங்கம் ₹1,00,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News January 3, 2026
ஜனநாயகன் புக்கிங் குறைய காரணம் என்ன?

ஜனநாயகன் பட வசூலில் 75%-80% வரை விநியோகஸ்தர்கள் கேட்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர், TN-ல் 60% தியேட்டர்களில் JN வெளியிடவே விரும்புகின்றனர். ஆனால் கேரளாவில் 60% கேட்கும் நிலையில், TN-ல் 75% கேட்கிறார்கள். இதுதான் ஜனநாயகன் புக்கிங் குறைய காரணம். இதை விஜய்யின் காதுக்கு கொண்டு சென்றுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
NZ-க்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

NZ-க்கு எதிரான ODI தொடருக்கான IND அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிட்னஸை பொறுத்து ஸ்ரேயஸ் அணியில் இடம்பெறுவார். அதேபோல், ஃபிட்னஸ் டெஸ்ட்டை கிளியர் செய்யாததால் ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. SQUAD: *கில் (C) *ரோஹித் *கோலி *KL ராகுல் *ஸ்ரேயஸ் (VC)*வாஷிங்டன் சுந்தர் *ஜடேஜா *சிராஜ் *ஹர்ஷித் ராணா *பிரசித் கிருஷ்ணா *குல்தீப் *பண்ட் *நிதிஷ்குமார் *அர்ஷ்தீப் சிங் *ஜெய்ஸ்வால்.


