News March 29, 2025

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக உதவி எண்கள்

image

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இருப்பவர்கள் 18003093793 என்ற எண்ணிலும், வெளிநாட்டில் இருப்பவர்கள் +918069009901 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம்.

Similar News

News January 15, 2026

ஜனவரி 15: வரலாற்றில் இன்று

image

*இந்திய ராணுவ தினம். *1868 – நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான டி.எம்.நாயர் பிறந்தார். *1929 – அமெரிக்க புரட்சியாளர் மார்ட்டின் லூதர் கிங் பிறந்தார். *1966 – நடிகை பானுப்ரியா பிறந்தார். *1981 – தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் காலமானார். *1986 – நடிகர் விக்ரம் பிரபு பிறந்தார். *2001 – விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. *2018 – எழுத்தாளர் ஞாநி சங்கரன் மறைந்தார்.

News January 15, 2026

தமிழகத்தில் 5 IAS அதிகாரிகள் இடமாற்றம்

image

பொங்கல் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் 5 IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக இன்னசென்ட் திவ்யா, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக கிறிஸ்துராஜ், தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக விசாகன், சுகாதாரத்துறை கூடுதல் செயலாளராக உமா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளராக ரத்னா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News January 15, 2026

பொங்கல் பண்டிகையும் சூரியனும்

image

சூரியனை வழிபடுவது ஐம்பூதங்களையும் வழிபடுவதற்கு சமம் என்று நன் முன்னோர்கள் கருதினர். சூரிய வழிபாட்டினால் தோல்நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்றும் நம்பினர். இதன் காரணமாக சூரியன் வடக்கு திசையை நோக்கி பயணிக்க தொடங்கும் தை முதல் நாளில் பொங்கல் வைத்து படையல் செய்து வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக சங்க காலம் தொடங்கி நாமும் பொங்கலை கொண்டாடி வருகிறோம்.

error: Content is protected !!