News March 1, 2025
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவி எண்

மார்ச் 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தங்களது புகார்கள், ஐயங்களை 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். 7518 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
Similar News
News March 12, 2026
TN புதிய கவர்னர் இன்று பதவியேற்பு!

தமிழ்நாட்டின் புதிய(பொறுப்பு) கவர்னராக கேரள மாநில கவர்னராக உள்ள ராஜேந்திர அர்லேகர் இன்று பதவியேற்க உள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். கிண்டியில் உள்ள மக்கள் பவனில் பிற்பகல் 12:30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் CM ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
News March 12, 2026
BREAKING: தமிழகத்தில் அடுத்த பிரச்னை வெடித்தது

தூத்துக்குடியில் நேற்று இரவு இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற <<19356260>>+2 மாணவி வன்கொடுமை<<>> செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு அடங்குவதற்குள் சென்னையில் கல்லூரி மாணவி காரில் கடத்தி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் இருந்து சென்னைக்கு ப்ராஜெக்ட் தொடர்பாக வந்திருந்த மாணவியை அடையாறு பகுதியில் காரில் கடத்தி ஒரு கும்பல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த விவகாரம் TN-ல் அடுத்த பிரச்னையாக வெடித்துள்ளது.
News March 12, 2026
பூமியை நோக்கி வரும் 600 கிலோ ஆபத்து!

நாசா 2012-ல் விண்ணில் ஏவிய 600 கிலோ எடை கொண்ட Van Allen Probe A விண்கலம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே பூமிக்கு திரும்புகிறது. விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும் என்றும் எஞ்சியிருக்கும் பெரும்பாலான துண்டுகள் தண்ணீரில் விழும் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், அது பூமியில் எங்கு விழும் என்று தெரியாததால், இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


