News June 26, 2024

சிகிச்சைக்கு உதவுங்கள்: நகைச்சுவை நடிகர்

image

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட வெங்கல் ராவ், நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், மருத்துவ செலவுகளுக்கு நடிகர்கள், சங்கங்கள் உதவ கோரி உருக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இவருக்கு உதவிட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Similar News

News December 4, 2025

‘டியூட்’ சர்ச்சை.. இழப்பீடு பெற்ற இளையராஜா

image

‘டியூட்’ படத்தில் கருத்த மச்சான், நூறு வருஷம் உள்ளிட்ட பாடல்களை, தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாக மெட்ராஸ் HC-ல் இளையராஜா வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கியதாகவும், படத்தின் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் பதிலளித்துள்ளது. இருதரப்பும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், டியூட்-ல் மீண்டும் அப்பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

News December 4, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 539
▶குறள்:
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
▶பொருள்: மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

News December 4, 2025

தோல்விக்கான காரணங்களை அடுக்கிய கே.எல்.ராகுல்

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் தோற்றதற்கு டாஸும் ஒரு முக்கிய காரணம் என்று கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார். ஏனெனில், 2-வது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீசுவது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், பேட்டிங்கின் போது 20-25 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கலாம் எனவும் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

error: Content is protected !!