News September 14, 2024
ஹெலிகாப்டர் சுற்றுலாவை நிறுத்த வேண்டும்: அன்புமணி

கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு வசதியாக ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறப்பதால் ஏற்படும் இரைச்சல் மக்களுக்கும், பறவைகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். தனியார் நடத்தும் இந்த சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News January 8, 2026
ஜனநாயகன் ஒத்திவைப்பால் விஜய் அதிர்ச்சி!

‘ஜனநாயகன்’ ரிலீஸ் பிரச்னையால் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18793942>>இரவில் KVN நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால்<<>> விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே கரூர் விவகாரத்தில் வரும் 12-ம் தேதி நேரில் ஆஜராக CBI சம்மன் அனுப்பியுள்ளதால் அவர் அதிர்ச்சியில் உள்ள நிலையில், இது அடுத்த அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. விஜய், ரசிகர்களும் SM-ல் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
News January 8, 2026
ராமதாஸின் திட்டம் என்ன?

அதிமுக தலைமையிலான கூட்டணியில் நேற்று <<18785984>>அன்புமணி இணைந்துவிட்டார்<<>>. இதனால் அடுத்தகட்டமாக ராமதாஸ் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்புமணியை போல ராமதாஸை கூட்டணிக்கு இழுக்க அதிமுக முயன்றாலும், அவரது தரப்பில் இன்னும் பிடி கொடுக்கவில்லை. அதேபோல் ராமதாஸ் தரப்பில் உள்ளவர்களில் சிலர் திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
News January 8, 2026
ஆஷஸ்: ஆஸ்திரேலியா வெற்றிக்கு 160 ரன்கள் இலக்கு

கடைசி ஆஷஸ் தொடரின் 2-வது இன்னிங்சில் 342 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தரப்பில் பெத்தலை தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால் பெரிய ஸ்கோரை குவிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், வெப்ஸ்டர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இன்று கடைசி நாள் என்பதால் ஆஸ்திரேலியா எளிதாக வெற்றிபெறும் வாய்ப்புள்ளது.


