News August 6, 2025
அடுத்தடுத்து கட்சி மாறிய மன்னன் குடும்ப வாரிசுகள்!

கடந்த வாரம் EPS முன்னிலையில் ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி அதிமுகவில் ஐக்கியமான நிலையில், இன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளைய மன்னர் கார்த்திக் தொண்டைமான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். புதுக்கோட்டை தொகுதியில் 1967 முதலே கார்த்திக் தொண்டைமானின் குடும்பம் அரசியல் வலிமை கொண்டது என்பதால், இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனப்படுகிறது. உங்கள் கருத்து?
Similar News
News August 6, 2025
6 வருடங்களுக்கு பின் சீனாவுக்கு செல்லும் PM மோடி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டத்தில் பங்கேற்க PM மோடி ஆக.31-ல் சீனா செல்கிறார். அங்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்பட பல தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார். 2020 கால்வான் மோதலுக்கு பின் இந்திய – சீன உறவு சீர்கெட்டிருந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பின் மோடி சீனா செல்வது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை மேற்கொள்ளும் நிலையில், மோடியின் சீன பயணம் கவனம் பெறுகிறது.
News August 6, 2025
விஜயகாந்த் போட்டோவை பயன்படுத்த கட்டுப்பாடு!

விஜயகாந்தின் போட்டோ, வசனங்களை தேமுதிகவை தவிர மற்ற அரசியல் கட்சிகள், தனிநபர்கள் பயன்படுத்தக்கூடாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் கட்சிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் செய்வது வேதனையளிப்பதாகவும் கூறினார். அதேநேரம், 2026 தேர்தல் கூட்டணி அறிவிப்புக்கு பிறகு வேண்டுமானால் விஜயகாந்த் போட்டோவை தோழமை கட்சிகள் பயன்படுத்தலாம் என்றார்.
News August 6, 2025
RR அணியிலேயே தொடரும் சஞ்சு

RR அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படும் சஞ்சு சாம்சனை தோனிக்கு மாற்றாக அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. கிட்டத்தட்ட அடுத்த சீசனில் சிஎஸ்கேவில் சஞ்சு இணைவது உறுதி என அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், சஞ்சு சாம்சனிடம் சமாதானம் செய்யப்பட்டு விட்டதாகவும், RR அணியிலேயே தொடருவார் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.