News March 6, 2025
ஹீரா கோல்டு மோசடி: சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி

ஹீரா கோல்டு நிறுவனம் 36% வரை லாபம் தருவதாக கூறி, நாடு முழுவதும் வலைவிரித்து முதலீட்டாளர்களை ஈர்த்தது. கோடிக்கணக்கில் பணம் சேர்ந்ததும் முதலீட்டாளர்களை ஏமாற்றத் தொடங்கியதால், நிர்வாக இயக்குநர் நெளஹெரா ஷேக் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 3 மாதத்தில் ₹25 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும், இல்லையென்றால் சிறைக்கு செல்ல நேரிடும் என எச்சரித்திருக்கிறது.
Similar News
News November 26, 2025
தென்காசி: கணவர் அடித்தால் CALL பண்ணுங்க!

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News November 26, 2025
JUST IN பெரம்பலூர்: மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.29 ஆகிய தேதி இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 26, 2025
பேங்க் அக்கவுண்ட் இல்லாமலும் UPI-யில் பணம் அனுப்பலாம்!

வங்கி கணக்கு இல்லாதவர்களும் பணம் அனுப்பும் ‘UPI Circle: Full Delegation’ என்ற வசதியை BHIM கொண்டு வந்துள்ளது *UPI ஆப்பில், வங்கி கணக்கு உள்ள Primary Users, ‘UPI Circle’ ஆப்ஷனுக்கு செல்லவும் *அதில், வங்கி கணக்கு இல்லாத 5 பேரை Secondary User-களாக சேர்க்கவும் *Secondary User-களுக்கு ஒரு VPA ID உருவாகும் *அதன் மூலம் அவர்கள் பரிவர்த்தனை செய்யலாம் *அதிகபட்சமாக ₹15,000 வரை பரிவர்த்தனை செய்யலாம்.


