News August 14, 2024

சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

சுதந்திர தினம், வரலட்சுமி விரதம், சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைந்திருக்கும் கிளாம்பாக்கம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு வரை வாகனங்கள் ஊர்ந்தே செல்கின்றன.

Similar News

News January 15, 2026

சிறு வீட்டுப் பொங்கல்…!

image

சிறு வீட்டுப் பொங்கல் என்பது நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வழக்கத்தில் உள்ள நடைமுறை. ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து, தாங்களாகவே வீடுகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் அருகில் பொங்கல் வைத்து படையலிட்டு சாமி கும்பிட்டு மகிழ்வார்கள். தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உங்கள் பகுதியில் இம்மாதிரி செய்வதுண்டா?

News January 15, 2026

பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்து டிரம்ப் அதிரடி முடிவு!

image

உலகம் முழுவதும் 75 நாடுகளுக்கான விசா நடைமுறையை வரும் 21-ம் தேதி முதல் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்களால் வெளிநாட்டினர் அளவுக்கு அதிகமாக பயன்பெறுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேசம், ரஷ்யா, ஈரான், குவைத் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாக கருதப்பட்ட பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் இப்பட்டியலில் உள்ளன.

News January 15, 2026

IND vs PAK: உலகெங்கும் எகிறிய மவுசு!

image

டி20 WC-யில் IND vs PAK மோதும் போட்டி பிப்.15-ம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்பனை தளமான BookMyShow செயலிழந்தது. பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முண்டியடித்ததால் சர்வர்கள் செயலிழந்துள்ளன. இது, இப்போட்டிக்கு உலக அளவில் இருக்கும் எதிர்பார்ப்பை காட்டுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!