News December 2, 2024

“நெஞ்சை பதற வைக்கிறது”.. விஜய் உருக்கம்

image

தி.மலை மண்சரிவில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டது நெஞ்சை பதற வைப்பதாக தவெக தலைவர் விஜய் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள அவர், புயல் மழைக்காலங்களில் பேரிடர் மீட்புப் படைகளை அரசு தயார் நிலையில் வைத்திருக்கவும், மலை அடிவாரங்கள், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News August 22, 2025

பெரம்பலூர்: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள்<> இங்கே <<>>கிளிக் செய்து, வரும் செப்.4-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 – 85,920/- வரை வழங்கப்படும். மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News August 22, 2025

BREAKING: விடுமுறை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

image

தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அத்துறையின் ஆணையர் பொன்னையா அனுப்பியுள்ள கடிதத்தில், VPRC, PLF மூலமாக தூய்மை பணியில் ஈடுபடுவோருக்கு வாரம் ஒருமுறை சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தூய்மை பணியாளர்கள் நீண்ட நாள்களாக இக்கோரிக்கையை அரசுக்கு வைத்திருந்தனர்.

News August 22, 2025

பெண்களை ஏளனமாக பேசும் திமுக அமைச்சர்கள்: நயினார்

image

விருதுநகரில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முறையிட்ட பெண்களிடம், ‘கம்மல் இருந்தால் ₹1,000 தர முடியாது’ என அமைச்சர் <<17480686>>KKSSR<<>> பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், திட்டங்களை தருகிறோம் என்ற பெயரில் மென்மேலும் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாக பேசுவது கண்டிக்கத்தக்கது என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். இதற்கு அமைச்சர், தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!