News December 8, 2024
இந்தியாவுக்கு பலத்த சறுக்கல்

உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் இந்தியாவை வெற்றி கொண்ட ஆஸ்திரேலிய அணி, 60.71 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இரண்டாவது இடத்தில் 59.26 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி இருக்கிறது. 57.29 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற இன்னும் சில போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது
Similar News
News March 3, 2026
திமுகவுடன் கூட்டணி.. வெளிப்படையாக அறிவித்தார்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாள்களாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து பேசிய செல்வப்பெருந்தகை, திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக விளக்கம் அளித்தார். தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் திமுக கெடு விதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
திமுக சின்னத்தில் போட்டி.. கமலுக்கு 5 சீட் கிடைக்குமா?

டார்ச் லைட் சின்னம் பெற்ற நிலையிலும், உதய சூரியன் சின்னத்திலேயே வரும் தேர்தலில் போட்டியிட மநீம முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 4-5 சீட்களை மநீம எதிர்பார்க்கிறதாம். விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சீட் உறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2024 லோக்சபா தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தியதை கமல் ஏற்கவில்லை என கூறப்பட்டது.
News March 3, 2026
திடீர் பாதுகாவலர் வேஷம் போடும் திமுக: TTV

சிறப்பு நிதி எனும் திமுகவின் தேர்தல் கால சித்து விளையாட்டுகள் மக்களிடம் எடுபடாது என TTV விமர்சித்துள்ளார். மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தக்கோரி, ஜனநாயக ரீதியில் போராடிய மாற்றுத்திறனாளிகளின் மீது திமுக அரசு காவல்துறையை ஏவி அடக்குமுறை செய்தது. ஆனால் தற்போது தேர்தல் நேரத்தில் திடீர் பாதுகாவலர் வேஷம் போடும் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முடிவிலிருந்து மக்கள் பின்வாங்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.


