News December 15, 2024
19ஆம் தேதி வரை கனமழை

தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரத்தில் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று MET தெரிவித்துள்ளது, மேலும், வரும் 19ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News March 6, 2026
LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு

வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ்க்கு(LPG) தட்டுப்பாடு வராமல் இருக்க LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. LPG-க்கு தேவையான அனைத்து எரிவாயுவையும் 3 அரசு நிறுவனங்களுக்கு (IOC, BPCL, HPCL) மட்டும் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. ஈரான் போர் சூழலால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ள நிலையில், அதை தடுக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
News March 6, 2026
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம்.. நயன்தாரா வாழ்த்து REWIND

விஜய் – த்ரிஷா சர்ச்சை SM-ல் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே, த்ரிஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு நயன்தாரா வாழ்த்து தெரிவித்த பழைய பதிவு SM-ல் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், த்ரிஷா, வருண் ஆகியோருக்கு வாழ்த்துகள் என நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். 2015-ம் ஆண்டு வருண் என்பவருடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.
News March 6, 2026
வாயைச் சுற்றி கருப்பா இருக்குதா? TIPS

வாயை சுற்றி கருப்பாக இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறதா? இதனை ஈசியா சரி செய்யலாம். எலுமிச்சை பழத்தை வெட்டி 2 நிமிடங்கள் வாயைச் சுற்றி தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், இறந்த செல்கள் நீங்கி சருமத்தில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கருமையை நீக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த TIPS பலருக்கும் உதவும் என்பதால் SHARE பண்ணுங்க.


