News October 21, 2025

கனமழை.. திமுக நிர்வாகிகளை களமிறக்கும் ஸ்டாலின்

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பருவமழை தொடர்பாக சென்னையில் உள்ள அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இதற்காக, சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி திமுக நிர்வாகிகளுக்கு CM ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் DCM உதயநிதி, அமைச்சர் KN.நேரு, மேயர்கள், துணை மேயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

Similar News

News April 3, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மளமளவென குறைந்துள்ளது. இன்று காலையில் 1 அவுன்ஸ் தங்கம் $103 வரை அதிகரித்த நிலையில், தற்போது $23 என குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இதனால் இந்திய சந்தையிலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். முன்னதாக, இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்தது.

News April 3, 2026

‘இன்று சஞ்சு பெரிய இன்னிங்ஸை விளையாடுவார்..’

image

சேப்பாக்கத்தில் நடைபெறும் PBKS-க்கு எதிரான மேட்ச்சில், சஞ்சு அதிரடியான இன்னிங்ஸை விளையாடுவார் என Ex வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். முதல் 4, 5 பந்துகளை எதிர்கொண்ட பிறகு சஞ்சு விஸ்வரூபத்தை காட்டுவார் எனவும் ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். PBKS-க்கு எதிரான இன்றைய போட்டியில் சஞ்சு அடித்து நொறுக்குவார் எனவும் அவர் உறுதியாக கூறியுள்ளார். முதல் போட்டியில் சொதப்பிய சஞ்சு இன்று அதிரடி காட்டுவாரா?

News April 3, 2026

திமுக கூட்டணி வேட்பாளரை மாற்ற போர்க்கொடி

image

திமுக கூட்டணியில் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் கே.கே.செல்வகுமார் நத்தம் தொகுதியில் போட்டியிடுகிறாா். இந்நிலையில், கே.கே.செல்வகுமார் RSS ஆதரவாளர் என்பதால், அவரை மாற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம் முஸ்லிம் அமைப்புகள் நேரடியாக வலியுறுத்தியுள்ளன. அவர்களின் கோரிக்கையை கேட்டுக்கொண்ட ஸ்டாலின், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!