News March 22, 2025

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும்

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, நாளை முதல் மார்ச் 25 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 14, 2025

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா? இதை பண்ணுங்க!

image

புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி இருந்தால் பட்டா பெற முடியுமா? ஆம், 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். அடையாள அட்டை, வசிப்பிட சான்று, மின்கட்டண ரசீது உள்ளிட்டவற்றுடன் பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து எந்த பிரச்னையும் இல்லையெனில் பட்டா வழங்குவார்கள். SHARE IT.

News September 14, 2025

BREAKING: தசரா விடுமுறை.. நாளை முதல் சிறப்பு அறிவிப்பு

image

குலசை தசரா திருவிழா இன்னும் 10 நாள்களில் தொடங்கவுள்ளது. அதனையொட்டியும், தீபாவளியை முன்னிட்டும் 3 மாதங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மைசூரு – நெல்லை இடையே நாளை முதல் நவ.24 வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல், நாளை முதல் அக்.27 வரை மைசூரு – ராமநாதபுரம் இடையேயும், செப்.18 – நவ.29 வரை மைசூரு – காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. SHARE IT.

News September 14, 2025

அண்ணாமலை காலாவதியான தலைவர்: கோவி.செழியன்

image

CM ஸ்டாலினை விமர்சிப்பதில் முன்னிலையில் நின்ற அண்ணாமலை, இப்போது கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக அமைச்சர் கோவி.செழியன் விமர்சித்துள்ளார். மகா யோக்கியரை போல வேஷம் போட்டு, ஒரு அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறி, தமிழகத்திற்கு பின்னடைவை தேடித் தந்தவரின் அனைத்து கள்ளத்தனமும் இப்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. மொத்தத்தில் அவர் காலாவதியான அரசியல் தலைவராகி விட்டார் என சாடியுள்ளார்.

error: Content is protected !!