News October 5, 2025
நேபாளத்தில் கனமழை: நிலச்சரிவில் 47 பேர் பலி

நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். இலம் மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் வெள்ளத்தில் 9 பேர் மாயமான நிலையில், 3 பேர் மின்னல் தாக்கி உயிரை பறிகொடுத்துள்ளனர். நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News October 5, 2025
டானிக் குடித்த குழந்தைகள் பலி: ம.பி. அரசு மறைக்க முயற்சி?

ம.பி.,யில் இருமல் டானிக் குடித்த குழந்தைகளின் உயிரிழப்புகளை மறைக்க அரசு நிர்வாகம் முயன்றதாக NDTV நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு ஆவணங்களின் படி 11 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், மருத்துவ அதிகாரிகள் நவராத்திரி விடுப்பில் உள்ளதால், இன்னும் ஒரு பிரேத பரிசோதனை கூட செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
News October 5, 2025
குழந்தையின் ToothPaste-ல் இந்த தவறை பண்ணாதீங்க!

பெற்றோர்களே, நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை குழந்தைகளுக்கும் கொடுக்குறீங்களா? இதனால் உங்கள் குழந்தையின் ஈறுகள் பாதிக்கப்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளுக்கு, குறைந்த புளோரைடு கன்டென்ட் கொண்ட டூத் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். இந்த பேஸ்ட்டுகளை தவறுதலாக விழுங்கினாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. மேலும், அவர்களுக்கு குறைந்த அளவு பேஸ்ட்டை பயன்படுத்தினால் போதும். SHARE.
News October 5, 2025
மாதம் ₹3 லட்சம் சம்பாதிக்கும் ஆட்டோக்காரர்!

ஒயிட் காலர் வேலை செய்பவர்களை, பெங்களூரு ஆட்டோக்காரர் ஒருவர் ஓவர்டேக் செய்துள்ளார். ₹5 கோடி மதிப்பில் 2 வீடுகள், அதை வாடகைக்கு விட்டு மாதம் ₹2 – 3 லட்சம் வருமானம், இதுபோக ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார் அந்த ஆட்டோக்காரர். அவரது கதையை கேட்ட இன்ஞ்சினியர் ஒருவர், சோசியல் மீடியாவில் பதிவிட இணைய உலகில் இதுதான் தற்போது பேசுபொருள். இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?