News October 7, 2025

6 மாவட்டங்களில் கனமழை பொழியும்

image

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களிலும், நாளை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களிலும் கனமழை பொழியும் என்று IMD தெரிவித்துள்ளது. எனவே, வெளியே சென்றால் குடை எடுத்துச் செல்லுங்க..

Similar News

News October 7, 2025

காந்தாரா-1 ஓடிடி ரிலீஸ் எப்போது?

image

பெரும் எதிர்பார்ப்புடன் அக்.2-ம் தேதி ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை பெற்றதால், 5 நாள்களில் ₹335 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதன் ஓடிடி ரிலீஸ் எப்போது என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அதன்படி, ‘காந்தாரா சாப்டர் 1’ அக்டோபர் 30-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என தகவல் கசிந்துள்ளது.

News October 7, 2025

பல மாதங்களுக்கு முன்பே ரோஹித்தை நீக்க முடிவு

image

ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க எடுத்த முடிவு எப்போதோ எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியது. மேலும் அஜித் அகர்கர் ரோஹித்திடம் இதுதொடர்பாக பல மாதங்களுக்கு முன்னேரே பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை மிகவும் ரகசியமாக வைத்து, இப்போது எடுக்கப்பட்ட முடிவுபோல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. திட்டத்தை வகுத்ததில் அஜித் அகர்கருக்கும், கம்பீருக்குமே முக்கிய பங்கு உள்ளதாம்.

News October 7, 2025

விஜய் அதிரடி முடிவு: யாரும் எதிர்பார்க்காத திருப்பம்

image

கரூர் துயரம் விஜய்யின் தீவிர அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது. இவ்விவகாரத்தில் 3 அறிக்கை, ஒரு வீடியோ வெளியிட்டு அமைதியாக இருக்கிறார்; ஊடகங்களையும் சந்திக்கவில்லை. இந்நிலையில், இனியும் காலதாமதம் செய்தால், அது கட்சியின் செயல்பாட்டை முழுமையாக பாதிக்கும் என கட்சி நிர்வாகிகள் அவரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து, கரூர் செல்வதற்கு முன், ஊடகங்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!