News May 14, 2024
இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இன்று குமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலையில் இருந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கனமழை வெளுத்து வாங்கப்போகிறது.
Similar News
News March 9, 2026
சற்றுமுன்: முன்னாள் MLA காலமானார்

காங்., மூத்த தலைவரும், EX MLA-வுமான சி.எஸ்.சுவாமிநாதன்(80) காலமானார். காங்., கமிட்டியின் பொதுச்செயலாளர், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், 1991-ல் புதுக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்று MLA-வாக தேர்வானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த MP ஜோதிமணி, சுவாமிநாதனின் எளிமையான சுபாவமும், நேர்மையும் அவரை ஒரு சிறந்த மக்கள் தலைவராக உயர்த்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
News March 9, 2026
மார்ச் 14-ல் பாஜக ஆட்சிமன்றக் குழுக்கூட்டம்

டெல்லியில் வரும் 14-ம் தேதி பாஜக ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணி விவகாரங்கள், தொகுதிப் பட்டியல், வேட்பாளர்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகின்றன. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிதின் நபின், வானதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
News March 9, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 சரிவு!

<<19333418>>சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியால் சென்னையில் தங்கம் விலை இன்று(மார்ச் 9) சவரனுக்கு ₹800 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம், 1 கிராம் ₹14,950-க்கும், சவரன் ₹1,19,600-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி 1 கிராம் ₹290-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,90,000-க்கும் விற்பனையாகிறது.


