News May 17, 2024
நாளை 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்

தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 27, 2025
50% வரிவிதிப்பு அமலானது.. ஸ்தம்பிக்கும் துறைகள்

USA-வின் 50% வரி விதிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. ஜவுளி, ஃபர்னிச்சர், வேளாண் உற்பத்தி, ஸ்டீல், லெதர் ஆகியவற்றிற்கு இந்த வரி விதிப்பு பொருந்தும். இதனால் இத்துறையினர் பெரும் சவாலைச் சந்திக்க நேரும் என்பதால், வேறு விதமான சலுகைகளை வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம், இந்தியா, USA உடனான வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News August 27, 2025
BREAKING: தங்கம் விலையில் பெரிய மாற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹75,120-க்கும், கிராமுக்கு ₹35 உயர்ந்து ₹9,390-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் ₹1,680 அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News August 27, 2025
அரசியல்வாதி போல் விஜய் நடக்க வேண்டும்: தமிழிசை

அரசியலுக்குள் விஜய் நுழைகிறார் என்றால், ஒரு நடிகரைப் போல் அல்லாமல் அரசியல்வாதியாக நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தொண்டர் தள்ளிவிடப்பட்டது தொடர்பாக <<17529771>>விஜய்<<>> மற்றும் பவுன்சர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையே பரஸ்பர மரியாதை பேணப்பட வேண்டும் என்றார்.