News September 28, 2024
19 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC) கணித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
Similar News
News December 27, 2025
விஜய்க்கு கீழ் யாரும் இருப்பார்களா? சரத்குமார்

விஜய் உடன் பாஜக கூட்டணி அமைக்காது என்பது தனது கருத்து என சரத்குமார் கூறியுள்ளார். தவெக பொதுக்குழுவில் விஜய்யின் தலைமையை ஏற்பவர்களுடன் கூட்டணி என சொன்ன பிறகு, அவருக்கு கீழ் யாரும் சென்று இருப்பார்களே என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், SM இல்லாத காலத்தில் தனக்கும் கூட்டம் கூடியதாகவும், தற்போது மக்களை சந்திக்காத விஜய், திடீரென வரும்போது அவரை பார்க்க கூட்டம் வருவது இயல்பு என்றும் அவர் கூறினார்.
News December 27, 2025
One last chance.. எமோஷனலான அனிருத்

‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ லான்ச், இன்று மலேசியாவில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது. இதற்கு சென்னையில் இருந்து புறப்பட்ட அனிருத், ‘விஜய் சாருடன் One Last Chance’ என எமோஷனலாக கூறியுள்ளார். தங்களது காம்போவில் உருவான அனைத்து பாடல்களும் ஹிட்டாகியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்த அவர், 80,000 பேர் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளதாகவும், அதனை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன் என்றார்.
News December 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை ▶குறள் எண்: 562 ▶குறள்: கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். ▶பொருள்: குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.


