News June 23, 2024
தமிழகத்தில் இன்று மிக கனமழை கொட்டும்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேநேரம், கேரள மற்றும் கர்நாடகாவில் இன்று அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் மேற்கு கடலோர மாநிலங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
மீண்டும் ARM – SK காம்போ?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘மதராஸி’ படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. அத்துடன், எதிர்பார்க்கப்பட்ட ₹100 கோடி கலெக்ஷனையும் படம் வசூலிக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் AR முருகதாஸ், சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கதையை மதராஸி பட ஷூட்டிங்கின்போது ARM கூற, அது SK-க்கு பிடித்துபோனதாம். விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.
News September 16, 2025
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தல் பணி

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தேர்தல் பணிகளுக்கு வர இயலாத நிலையில், மாற்று ஏற்பாடுகள் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். அங்கன்வாடி பணியாளர்கள், VAO-க்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழகத்தில் புதிதாக 6,000 வாக்குச்சாவடிகள் இணைக்கப்படவுள்ளது. இதன் எண்ணிக்கை 74.000 ஆக உயரவுள்ளது.
News September 16, 2025
இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்த அதிசயம்!

ஒடிசாவில் தனது மருமகன் வீட்டில் வசித்துவந்த லட்சுமி(86), கட்டிலில் அசைவற்று கிடந்துள்ளார். மூச்சும் விடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் இறந்துவிட்டதாக எண்ணி தகனம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. எரியூட்டுவதற்கு முன், லட்சுமி மூச்சுவிடுவதை கண்டு மயான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாட்டிக்கு ஆயுசு கெட்டி!