News May 10, 2024
மே 14ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 11ஆம் தேதி 8 மாவட்டங்களிலும், மே 12ஆம் தேதி 9 மாவட்டங்களிலும், மே 13ஆம் தேதி 10 மாவட்டங்களிலும், மே 14ஆம் தேதி 8 மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 25, 2025
கால்கள் அடிக்கடி மரத்துப்போகுதா? ஜாக்கிரதை!

கால்கள் மரத்துப்போவது சாதாரண விஷயம் என்றாலும், அடிக்கடி கால்கள் மரத்துப்போவது சில உடல்நல பிரச்னைகளை குறிப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சுகர், வைட்டமின் குறைபாடு, நரம்பியல் பிரச்னைகள், வெரிகோஸ் வெயின், பக்கவாதம் போன்ற பல நோய்கள் ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. எனவே, காலம் தாழ்த்தாமல் டாக்டரை பாருங்கள். SHARE.
News October 25, 2025
சிட்னி கிரவுண்டும்.. Hitman ரெக்கார்டும்!

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ODI போட்டி இன்று சிட்னியில் தொடங்குகிறது. இந்த மைதானத்தில் 5 ODI போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய ஓபனர் ரோஹித் சர்மா, 1 சதம், 2 அரைசதங்கள் என மொத்தம் 333 ரன்களை குவித்துள்ளார். சிட்னியில் தனது அபாரமான பேட்டிங்கை ரோஹித் இன்றும் வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். சோபிப்பாரா Hitman?
News October 25, 2025
நோயில்லா வாழ்க்கை வாழ…

விடியற்காலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நமது உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். சுவாச மண்டலத்தை சிறப்பாக இயங்கச் செய்யும். காலை நேரத்தில் யோகா, நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிளிங், தியானம் போன்ற சுவாசத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் பயிற்சிகளை செய்யலாம். இதனால், மனமும், உடலும் புது சக்தி பெற்று, நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT.


