News August 7, 2025
அடுத்த 3 நாள்களுக்கு ‘HEAVY RAIN’ வார்னிங்!

இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. இன்று தி.மலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், நாளை நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும், நாளை மறுநாள் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News August 7, 2025
விமர்சன வீடியோ: கோபி, சுதாகர் மீது புகார்

கவின் ஆணவக் கொலையை மையமாக வைத்து யூடியூப்பில் பரிதாபங்கள் சேனல் அண்மையில் வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோவில் இரு சமூகத்தினர் இடையே பிரச்னையை உருவாக்கும் வகையில் பல கருத்துக்கள் இருப்பதாகவும், குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதாகவும் அதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோவை போலீஸில் தனுஷ்கோடி என்பவர் புகாரளித்துள்ளார். பரிதாபங்கள் வீடியோ பற்றி உங்கள் கருத்தென்ன?
News August 7, 2025
பள்ளிகளிலேயே ஆதார் பயோமெட்ரிக்.. அரசு அறிவிப்பு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக்கை புதுப்பிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 5 – 7 வயதுக்குட்பட்ட 8 லட்சம் மாணவர்கள் முதல்முறை கட்டாய பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும், 15- 17 வயதுக்குட்பட்ட 7 லட்சம் மாணவர்கள் 2-வது முறை புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் முகாம் அமைத்து அஞ்சல் துறை இந்த பணிகளை மேற்கொள்ளும்.
News August 7, 2025
இந்தியாவில் வாகன விற்பனை 4% வீழ்ச்சி

ஜூலையில் உள்நாட்டு வாகன விற்பனை 4% சரிந்துள்ளதாக வாகன டீலர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதத்தில் 20,52,759 ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 19,64,213 ஆக குறைந்துள்ளது. 2024 ஜூலையில் 3,31,280 ஆக இருந்த கார்கள் விற்பனை கடந்த மாதத்தில் 3,28,613 ஆகவும், இருசக்கர வாகன விற்பனை 6% சரிந்து 13,55,504 ஆகவும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.