News February 28, 2025
11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று IMD கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மறுநாள் தென்தமிழகம், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
Similar News
News April 1, 2026
ஜப்பானில் கட்டடங்களை உலுக்கிய நிலநடுக்கம்

ஜப்பானில் டோச்சிகி & இபராகி மாகாணங்களில் இன்று காலை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 48 கிமீ ஆழத்தில் இருந்ததால் கட்டட அதிர்வு காரணமாக மக்கள் பீதியடைந்தனர். எனினும் இதனால் உயிரிழப்போ, சுனாமி அச்சுறுத்தலோ எதுவும் இல்லை தெரிவித்த ஜப்பான் வானிலை மையம், அடுத்த 2 முதல் 3 நாள்களில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகமாக உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News April 1, 2026
விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட உரிமை உள்ளது: KAS

விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து <<19535230>>சீமான், இனிகோ இருதயராஜ்<<>> உள்பட பலர் விமர்சித்து வருகின்றனர். அதற்கு பதிலளித்து திருச்சியில் பேசிய KAS, 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு ஜனநாயகத்தில் உரிமை உள்ளது என்றார். ஜெயலலிதா கூட 1991-ல் 2 தொகுதிகளில் போட்டியிட்டார்; புதிதாக தேர்தலை சந்திப்பவர்கள் 2 தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கம் தான். அதைத்தான் விஜய் செய்துள்ளார் என கூறினார். <<-se>>#TNElection2026<<>>
News April 1, 2026
ஏற்றத்துடன் முடிவடைந்த சந்தை.. முதலீட்டாளர்கள் குஷி

இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய நிதியாண்டின் முதல் நாளில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 1,600 புள்ளிகளும், நிஃப்டி 500 புள்ளிகளும் உயர்ந்தன. சந்தை தொடங்கிய ஒரே மணி நேரத்திலேயே முதலீட்டாளர்கள் ₹13 லட்சம் கோடி வரை லாபம் ஈட்டினர். இதனால், மொத்த BSE சென்செக்ஸ் சந்தை மூலதனம் ₹4,12,41,172.45-லிருந்து ₹4,25,18,811 ஆக உயர்ந்தது.


