News May 24, 2024
காலை 10 மணி வரை கனமழை

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், கோவை, தென்காசி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட், குமரி, புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்குத் தொடர்ச்சி மாவட்டச் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 12, 2026
தனி சின்னத்திற்காக சமரசமா? வைகோ

PM மோடி 2029-க்கு பிறகு அவரது பதவி நாற்காலியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என வைகோ பேசியுள்ளார். தனி சின்னத்தில் போட்டியிடுவதற்காக சமரசம் செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு<<19354958>>, கட்சியின் பதிவை பாதுகாப்பதற்காக ஒரு தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம்.<<>> இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். தொகுதி பங்கீட்டில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டு தாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 12, 2026
ஃபரூக் அப்துல்லாவின் Z+ பாதுகாப்பில் சந்தேகம்: ஓமர்

துப்பாக்கி சூட்டில் <<19359220>>ஜம்மு காஷ்மீர் Ex CM ஃபரூக் அப்துல்லா மயிரிழையில் உயிர் தப்பியது<<>> குறித்து ஓமர் அப்துல்லா சந்தேகம் தெரிவித்துள்ளார். தன் தந்தைக்கு மிக நெருக்கமாக குண்டு பாய்ந்ததாகவும், எனினும் சுட்டவரை தடுத்து பாதுகாப்பு குழு படுகொலை முயற்சி தோல்வியடைய செய்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் Z+ NSG பாதுகாப்பு உடைய Ex CM-ஐ எப்படி ஒருவரால் நெருங்கிச் செல்ல முடிந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 12, 2026
மார்ச் 12: வரலாற்றில் இன்று

*1930 – மகாத்மா காந்தி பிரிட்டிஷ் அரசின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை தொடங்கினார். 1954 – சாகித்ய அகாடமி இந்திய அரசால் தொடங்கப்பட்டது. *1993 – மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர். * 1984 – இந்திய பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பிறந்த தினம். * 2009 – தமிழ்த் திரைப்பட நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் நினைவு தினம்.


