News October 16, 2025
கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலியாக நெல்லையை தொடர்ந்து மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 16, 2025
சிலிண்டருக்கு மானியம்; உடனே இத செக் பண்ணுங்க!

சமையல் சிலிண்டருக்கான மானியம் உங்களுக்கு சரியாக கிடைக்கிறதா என்பதை நீங்களே செக் பண்ணலாம். ➤இதற்கு, www.mylpg.in இணையதளத்திற்கு செல்லுங்கள் ➤இதில், நீங்கள் பயன்படுத்தும் சிலிண்டர் கம்பெனியின் லோகோவை க்ளிக் செய்யுங்கள் ➤மொபைல் எண் & LPG ஐடியை உள்ளிடுங்கள் ➤பின்னர் மானியம் தொடர்பான அனைத்து விவரங்களும் தோன்றும் ➤மானியம் வரவில்லை என்றால் pgportal.gov.in-ல் புகாரளிக்கலாம்.. SHARE.
News October 16, 2025
இசை அரசனுக்கு ஹேப்பி பர்த்டே!

‘Y திஸ் கொலவெறி’ மூலம் முதல் படத்திலேயே உலகத்தை திரும்பி பார்க்கவைத்த அனிருத், இன்று இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். அவரின் இசை போர் அடிக்கிறது என விமர்சிப்பவர்களும், அவரின் பாடல்களுக்கு வைஃப் பண்ணாமல் இருக்க மாட்டார்கள். இந்தியாவில் எந்த பெரிய ஹீரோ படம் தொடங்கினாலும், பிள்ளையார் சுழி போடும் போதே, அனிருத் என எழுதுகின்றனர். இதுவே அவரின் உச்சம். உங்களுக்கு பிடிச்ச அனிருத் பாட்டு எது?
News October 16, 2025
விஜய் கட்சிக்கு தலித்துகள் சென்றால்.. திருமாவளவன்

விஜய் கட்சி தொடங்கியதும், தலித்துகள் பெருமளவு தவெகவிற்கு சென்று விடுவார்கள் என சோசியல் மீடியாக்களில் பேசியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால், அவ்வாறு சென்றால், அவர்கள் விசிகவில் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றும், கொள்கையற்ற பதர்கள் எனவும் விமர்சித்துள்ளார். தன்னால் நீக்கப்பட்ட சிலரும் BJP-யில் இணைந்து தற்போது சங்கிகளாக மாறிவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.