News March 10, 2025

கனமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலெர்ட்

image

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில், ஒருசில இடங்களில் நாளை (மார்ச் 11) மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுத்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

Similar News

News August 15, 2025

தேச வளர்ச்சிக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்: PM

image

இல.கணேசனின் மறைவு செய்தி தனக்கு வலியை தந்ததாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க கடுமையாக பணி செய்ததாகவும், தேசத்தின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த தேசியவாதியாக அவர் நினைவுகூரப்படுவார் என்றும் இரங்கல் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் எனவும் இல.கணேசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

News August 15, 2025

இந்தியா வரும் ரொனால்டோ? ரசிகர்களுக்கு HAPPY NEWS!

image

கால்பந்து GOAT ரொனால்டோ இந்தியாவில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘AFC சாம்பியன்ஸ் லீக் 2’ போட்டியில் ரொனால்டோ விளையாடும் சவுதி கிளப்பான அல்-நாசர், இந்தியாவின் கோவா FC இரண்டும் ஒரே பிரிவில் (Group D) இடம்பெற்றுள்ளன. எப்படியும் இரண்டு அணிகளுக்கு இடையே ஒரு ஆட்டமாவது இந்தியாவில் நடைபெறும். அந்த போட்டிக்கு ரொனால்டோ ஆப்சென்ட் ஆகாமல் இருந்தால், ரசிகர்களுக்கு விருந்து நிச்சயம்!

News August 15, 2025

இல. கணேசன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

image

நாகாலாந்து கவர்னர் <<17417276>>இல. கணேசன்(80)<<>> மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாஜகவில் மாநிலத் தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த அவருக்கு, 2021-ல் கவர்னர் பதவி வழங்கி மத்திய அரசு சிறப்பித்திருந்தது. அவரது மறைவுக்கு இபிஎஸ், தமிழிசை, அண்ணாமலை, எல்.முருகன், செல்வப்பெருந்தகை, TR பாலு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

error: Content is protected !!