News February 27, 2025

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் சுற்றுப்பகுதிகளிலும் இன்று (பிப்.27) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை, கடலோர பகுதிகளின் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

Similar News

News February 27, 2025

வீட்டில் இருந்தபடி கட்சி நடத்துகின்றனர்: தி.க. விமர்சனம்

image

Work From Home முறையில் சிலர் கட்சி நடத்துவதாக தவெக தலைவர் விஜய்யை தி.க. தலைவர் கி.வீரமணி மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஒப்பனையாளர்கள் எழுதி கொடுக்கும் வசனங்களை அவர்கள் மேடையில் பேசி வருவதாகவும், தேர்தல் முடிந்தால், Work From Home-ல் பணியாற்றுபவர்கள் Home-ல் தான் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். 2026 தேர்தல் அனைத்து வித கருத்துகளுக்கும் பதில் அளிப்பதாக இருக்கும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

News February 27, 2025

ஃபைனலில் INDஐ வீழ்த்துவோம்.. இப்போ என்ன ஆச்சு?

image

CTயில் இருந்து ENG வெளியேறியதால், அந்த அணி வீரர் பென் டக்கெட்டை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் முடிந்த INDக்கு எதிரான ODI தொடரில், தொடர்ந்து 2 போட்டிகளில் ENG தோற்றது. அப்போது, அனைத்து போட்டிகளிலும் தோற்றாலும் அது மேட்டர் இல்லை, CTக்காகவே இங்கு வந்திருக்கிறோம், CT ஃபைனலில் INDஐ வெல்வோம் என டக்கெட் கூறியிருந்தார். ஆனால், செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் ENG வெளியேறியுள்ளது.

News February 27, 2025

வங்கதேசத்தில் ராணுவ ஆட்சிக்கும் செக்?

image

வங்கதேசத்தில் ஹஸீனாவின் ஆட்சி கலைப்புக்கு காரணமான மாணவ அமைப்பின் தலைவர் நஹித் இஸ்லாம், இடைக்கால அரசுக்கு நெருக்கடியை தந்திருக்கிறார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவர் நாளை புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். ஆளும் இடைக்கால அரசு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதே தனது முடிவுக்கு காரணம் என்றும் கூறியுள்ளார். வங்கதேசத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ?

error: Content is protected !!