News February 24, 2025

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

வரும் 28ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. அதேநேரம், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வரும் 27ஆம் தேதி வரை 99 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை இருக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Similar News

News February 24, 2025

‘சீமான்’ பெயரை கூட சொல்லாத காளியம்மாள்

image

நாதகவில் இருந்து விலகியது தொடர்பாக காளியம்மாள், ஒரு பக்க அளவிற்கு உருக்கமாக அறிக்கை வெளியிட்டிருந்தார். சுமார் 29 வரிகள் இருந்த அந்த அறிக்கையில் நாதகவின் பணி, அக்கட்சியின் தொண்டர்கள் செயல்பாடு, அவர்களுடன் பழகியது மற்றும் தனது குமுறலையும் உள்ளத்தில் இருந்து வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், இவ்வளவு நீண்ட நெடிய அறிக்கையில் ஒரு இடத்தில் கூட ‘சீமான்’ பெயரை கூட அவர் குறிப்பிடவில்லை.

News February 24, 2025

மளமளவென சரியும் பங்குச்சந்தை

image

தொடர்ந்து சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தை, இன்றும் 1 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. நிஃப்டி இன்று 243 புள்ளிகள் சரிந்து 22,552 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. IT நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் கடும் சரிவைக் கண்டது, சந்தையின் இன்றைய வீழ்ச்சிக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

News February 24, 2025

அரசு ஊழியர்கள் போராட தடை!

image

அரசு ஊழியர்கள் நாளை போராடத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு மறுவிசாரணைக்கு வரும் வரை சாலை மறியல், பணி புறக்கணிப்பு உள்ளிட்ட எந்தப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ நாளை மாநில அளவில் போராட இருந்த நிலையில், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!