News May 2, 2024
8 மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று சூறைக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. கோடை வெயில் நாளுக்கு நாள் தமிழகத்தில் வாட்டி வதைத்து வருகின்றது. இந்தச் சூழலில் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நீலகிரி, நாமக்கல், வேலூர், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News February 17, 2026
BIG FLASH: கார்களின் விலை ₹75,000 குறைந்தது..

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த பிப்ரவரியில் ஜாக்பாட் தள்ளுபடியை ஹூண்டாய் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹20,000 முதல் அதிகபட்சமாக ₹75,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE
News February 17, 2026
பிப்.20-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.20-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற ஆய்வுக் குழு கூட்டத்தில், கூட்டத்தொடர் கால வரம்பை நிர்ணயித்த சபாநாயகர் அப்பாவு, நாளை மற்றும் நாளை மறுநாள் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
News February 17, 2026
பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லாதது ஏன்?

பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லாதது குறித்து TN அரசு விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக இடைக்கால பட்ஜெட் என்பது அரசின் சாதனைகளை தெரிவிக்கும் அறிக்கையாகவே இருக்கும் என்றும் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது மரபு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாக இடைக்கால பட்ஜெட் இருக்கும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


