News April 21, 2025
கனமழை..நிலச்சரிவு.. உருக்குலைந்த ரம்பன்!

ஜம்மு – காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால், பல கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மழை விடாமல் பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நீடிக்கும் என்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 20, 2025
இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும்: ராகுல்

தீபாவளியையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும் எனவும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அன்பின் ஒளி பொங்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News October 20, 2025
பட்டாசு வெடிக்கும்போது கண்கள் பத்திரம்!

பட்டாசு புகையால் நுரையீரலுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் பாதிப்புகள் வரலாம். சாதாரண கண் எரிச்சலில் தொடங்கி, மாலைக்கண், கண்புரை ஏற்பட வாய்ப்புள்ளதுனு டாக்டர்கள் சொல்றாங்க. எனவே, ➤பட்டாசு வெடிக்கும்போது கண்ணாடி அணியுங்கள் ➤எரிச்சல் ஏற்பட்டால் உடனே தண்ணீரில் கழுவுங்கள் ➤பட்டாசு வெடித்த கையை கண்ணில் வைக்க வேண்டாம் ➤பட்டாசு வெடிக்கும் குஷியில் ரொம்ப நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்காதீங்க. SHARE.
News October 20, 2025
இவ்வளவு பெரிய பூசணிக்காயா!

பூசணிக்காய் வளர்ப்பது என்பது சாதாரண வேலை அல்ல. அதிலும் பிரம்மாண்ட பூசணிக்காய்களை வளர்ப்பது பெரிய விஷயம். அப்படி வளர்க்கப்படும் பூசணிக்காய்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில், பிராண்டன் டாசன் என்ற பொறியாளர் வளர்த்த 1,064 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதல் பரிசை தட்டி சென்றது. அவருக்கு சுமார் ₹17 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.