News August 19, 2024

இன்று இந்த மாவட்டங்களில் கனமழை

image

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. கோவை நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News December 3, 2025

கேஸ் மாஸ்க் உடன் Entry கொடுத்த MP-க்கள்

image

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இதனை வலியுறுத்தும் வகையில் எதிர்க்கட்சி MP-க்கள் கேஸ் மாஸ்க் உடன் நாடாளுமன்றத்துக்கு சென்றனர். காற்றுமாசுபாடு விவகாரத்தில் PM மோடி தலையிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

News December 3, 2025

வீட்டில் தீபம் ஏற்றும்போது இந்த தவறை செய்யாதீர்கள்..

image

*தீபத் திருநாளன்று விளக்குகளை சுத்தம் செய்யக்கூடாது. *கீறல் விழுந்த விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. *மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். *6 விளக்குகளுக்கு மேல் ஏற்ற வேண்டும். *எல்லா திசைகளிலும் எரியும்படி, தீப விளக்குகளை வைக்க வேண்டும். *கோலம் போட்டு நடுவில் விளக்குகளை வைக்கலாம். *இயன்றவற்றை நைவேத்யமாக படைத்து, தீபாராதனை காட்டிவிட்டு பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

News December 3, 2025

TNPSC Group 4 காலியிடங்கள் 5,307 ஆக உயர்வு… HAPPY NEWS

image

நடப்பாண்டில் எழுதிய TNPSC குரூப் 4 தேர்வில், 645 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 3,935 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பிறகு 727 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 645 இடங்களும் சேர்த்து மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5,307 ஆக உள்ளது. தேர்வர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!