News July 4, 2024
நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை

தமிழகத்தில் பல மாவட்டங்களில் நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென மழை பெய்து வெப்பத்தை தணித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. சென்னையில் பெய்த கனமழையால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் சிறிது தாமதம் ஏற்பட்டது.
Similar News
News November 27, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து நீக்கம்.. இபிஎஸ் அடுத்த அதிரடி

சேலம் ஆத்தூர் அருகே அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் இணைச் செயலாளரான சங்கர், தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இது அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சங்கர் நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார்.
News November 27, 2025
தித்வா புயல்: பெயருக்கு இதுதான் அர்த்தமா..!

வங்க கடலில் உருவாக உள்ள புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‘தித்வா’ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. “Detwah Lagoon” என்பது யேமனின் Socotra தீவில் உள்ள குளத்தை குறிக்கிறது. அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக மாறவிருக்கும் இது, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறதாம். இதனால் சென்னை உள்பட வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என IMD எச்சரித்துள்ளது.
News November 27, 2025
இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார்? HC

‘Dude’ படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய தனது பாடலை நீக்க கோரி இளையராஜா, சென்னை HC-ல் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், 30 வருடங்களுக்கு முன்பு வெளியான பாடல்களை கேட்டு ரசிப்பதால் இளையராஜா எவ்வாறு பாதிக்கப்படுகிறார் என HC கேள்வி எழுப்பியது. பாடலுக்கான உரிமை எங்களிடம் உள்ளதாக இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர், இம்மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் HC ஒத்திவைத்தது.


