News August 5, 2024
சென்னையில் வெளுத்து வாங்கிவரும் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த 3 மணி நேரமாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மாதவரம், பெரம்பூர், கொளத்தூர், அண்ணா நகர், எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் மழை பொழிந்து வருகிறது. தாழ்வான பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
Similar News
News March 20, 2026
குமரி: அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி

குமரி மாவட்டம், ஈசாந்திமங்கலம் ஊராட்சியை சேர்ந்த திராவிட முன்னேற்ற கழக கிளைக் கழக செயலாளர், முன்னாள் 5-வது வார்டு கவுன்சிலர் சிவதாணுபிள்ளை நேற்று திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னிலையில் இணைந்துள்ளார். அவருடன் ஈசாந்திமங்கலம் ஊராட்சிக் கழக பொறுப்பாளர் சாஸ்தான்குட்டி பிள்ளை உட்பட பலர் உடன் இருந்தனர்.
News March 20, 2026
கரூர்: நீங்க தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்ப பெறலாம்!

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News March 20, 2026
5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. ஏற்கெனவே, அரியலூர், திருவாரூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவு முதலே சில இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழையா?


