News August 7, 2024
இன்று 8 மாவட்டங்களில் கனமழை

ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. இன்று முதல் ஆக.11ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் 30-40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News November 21, 2025
கில்லுக்கு இன்று பிட்னஸ் டெஸ்ட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் கழுத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சுப்மன் கில் பாதியில் வெளியேறினார். இதனால் கவுகாத்தியில் நடக்கும் 2-வது டெஸ்டில் அவர் விளையாடுவதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் அவருக்கு இன்று பிட்னஸ் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. இதன் முடிவில் கில் நாளை தொடங்கும் 2-வது டெஸ்டில் விளையாடுவாரா, மாட்டாரா என்பது தெரியவரும்.
News November 21, 2025
ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் PM மோடி

தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் PM மோடி பங்கேற்கிறார். 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 3 அமர்வுகளில் PM மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலையான பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், எதிர்கால தொழில்நுட்பம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டிற்கு மத்தியில், சில தலைவர்களுடன் PM மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 21, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. தங்கம் 1 அவுன்ஸ்(28g) $16.32 சரிந்து $4,065-க்கும், வெள்ளி(1 அவுன்ஸ்) $0.83 குறைந்து $50.74-க்கும் விற்பனையாகிறது. நேற்று(நவ.20) சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்த நிலை நீடித்ததால் நம்மூர் சந்தையில் சவரனுக்கு ₹800 குறைந்தது. இன்றும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


